தமிழ்நாடு

தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு

webteam

தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட தேசிய கல்வி கொள்கை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்ட நிலையில், பிற மொழிகளிலும் தேசிய கல்விகொள்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது அசாம், மராத்தி உட்பட 17 மொழிகளில் தேசிய கல்வி கொள்கை மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தமிழ் மொழிப்பெயர்ப்பு இடம் பெறவில்லை.

முன்னதாக, 1968 ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டது. 1976 ஆம் ஆண்டு அரசியலைப்பு சட்டத்தின் 42 ஆவது திருத்தத்தின் படி கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1986, 1992 ஆண்டுகளில் கல்வி கொள்கையில் திருத்தம் கொண்டுவரபட்டது. 

இதனிடையே 2019 ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழு தாக்கல் செய்த கல்விக்கொள்கையை அடிப்படையாக வைத்து 2020 இல் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தக்கல்விக்கொள்கையில் 6 வகுப்பு முதல் மாணவர்களுக்கு தொழிற்கல்வி, பல்கலைகழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெறும்.