தொல்காப்பிய பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் விஜய் மட்டும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.. எங்க வீட்டு பக்கத்தில் தான் விஜய் குடி இருக்கிறார். நடிகர் விஜய்யை எம்ஜிஆர் உடன் ஒப்பிட கூடாது. விஜயின் ரசிகர்கள் அணில் போன்று மரத்தின் மீது தாவுகிறார்கள். எம்ஜிஆருக்கு ஒரு லட்சம் பேர் கூடினாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது இல்லை. 27 ஆயிரம் பேரை கூட விஜயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவரது கட்சிக்கு கொள்கையே இல்லை பிற கட்சியினரை பார்த்து கொள்கை எதிரி என்று சொல்கிறார். விஜய் கோழைத்தனமாக இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.