அன்புமணி pt desk
தமிழ்நாடு

"நான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் அந்த இடத்தை.." - அன்புமணி ஆவேசம்

திருத்தணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தான் ஆட்சியில் இருந்தால், பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அந்த இடத்தை வெட்டி விடுவேன் என்று ஆவேசமாக பேசினார்.

PT WEB

செய்தியாளர்:B.R. நரேஷ்

திருவள்ளுார் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது....

cm stalin

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 35 ஆண்டு கால வரலாறு உள்ளது. தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நாம் பல சாதனைகளை செய்திருக்கிறோம். வேறு எந்தக் கட்சியும் இதனை சொல்ல முடியாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சமூக நீதி சாதனைகள், விவசாய சாதனைகள், சுற்றுச்சூழல் சாதனைகள், கல்விக்கான சாதனைகளை செய்து இருக்கின்றோம்

தமிழகத்தில் பெண்கள் எங்கும் தனியாக செல்ல முடியாது:

தமிழகத்தில் சட்டமும் கிடையாது. சட்ட ஒழுங்கும் கிடையாது. தமிழகத்தில் பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனை என்ன செய்யலாம். எட்டு பேர் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர், ஏழு பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது, இதெல்லாம் நடப்பது தமிழகத்தில் தான்.

Pocso case

பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடைபெறுகிறது தெரியுமா?

தமிழகத்தில் நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும். அந்த நபர்களை அந்த இடத்தில் வெட்டி இருப்பேன். இப்படி செய்தால் வேறு யாராவது இதுபோல் சம்பவங்களில் ஈடுபடுவார்களா, அந்த பயம் வரவேண்டும் இவர்கள் வெட்டி விடுவார்கள் என்று பயம் வர வேண்டும். இந்த சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது தெரியுமா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்,

தமிழகத்தில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை:

இந்த ஆட்சியில் மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால், ரத்து செய்தார்களா?” என்று கூட்டத்தினரை பார்த்து பாமக தலைவர் அன்புமணி கேள்வியெழுப்பினார்.