தமிழ்நாடு

மதுஅருந்திவிட்டு பணி செய்தால்.. ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை

webteam

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்குவது கண்டறியப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

போக்குவரத்துத் துறை சார்பாக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றனர். அதில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் வருகிறது. எனவே மது அருந்திய நிலையில், பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.

எனவே ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது மது அருந்திய நிலையில், பணியில் இருக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர். மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம்) மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் பணியில் ஒருங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய அறிவுறுத்தல் செய்யப்பட்டது. இந்த தகவலை அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்