தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பினால் குண்டர் சட்டம்

வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பினால் குண்டர் சட்டம்

rajakannan

குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பினால் குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வேலூர் எஸ்பி கூறுகையில், “தவறான தகவல்களை பரப்பவேண்டாம்; சந்தேக நபர்கள் என தெரிந்தால் போலீசுக்கு தகவல் தாருங்கள். தவறான தகவல்களை வாட்ஸ் அப்பில் பரப்பியது யார்? யார்? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 

அதேபோல், “காஞ்சிபுரத்தில் குழந்தைகளை கடத்த வருவதாக வாட்ஸ் அப் மூலம் வீண் வதந்திகள் பரப்பினால் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி கூறியுள்ளார். 

இதனிடையே, விழுப்புரத்தில் சந்தேகப்படும் நபர்கள் பற்றி 9655440092 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் குழந்தைகள் கடத்தல் என வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.