துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் முதலில் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள்” - துணை முதல்வர் உதயநிதி!

சென்னை செனாய்நகரில் உள்ள தனியார் அரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

PT WEB

"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார்... முடிந்தால், தைரியம் இருந்தால் முதலில் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள்" என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை செனாய்நகரில் உள்ள தனியார் அரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் ஒருமையாக பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

அண்ணாமலை

"அது அவர்களுடைய தரம். பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழ்நாட்டு மக்கள் இவர்களை 'கோ பேஃக் மோடி' என்று சொல்லிவிட்டார்கள். 2018 ஆம் ஆண்டு திருட்டுத்தனமாக சுவரை உடைத்துக் கொண்டு மோடி வந்தார். மக்களை சந்திக்க பயந்தார். மக்கள் கருப்புக்கொடி காட்டினார்கள். பலூன் பறக்கவிடப்பட்டது. அதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும் ” என்றார்.

”இந்த நிதி தொடர்பான பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார்கள்.வால்போஸ்ட் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? வீட்டில் தான் இருப்பேன் வரட்டும். அறிவாலயம் குறித்த எதோ முன்பு சொன்னார். முடிந்தால் அண்ணா சாலை பக்கமாவது வரட்டும்” என்று அண்ணாமலைக்கு பதில் அளித்தார்.

பிரச்சனையை உதயநிதிக்கும் பாஜக மாநில தலைவருக்கும் என மாற்ற முயற்சிக்கிறார்கள். நிதியை பெற்று தர முயற்சி செய்ய சொல்லுங்கள்.

தனியார் பள்ளியை சட்ட விரோதமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுபபிய அவர் ஒன்றிய அரசிடம் உரிய அனுமதி பெற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதையும் இதையும் ஒப்பிட வேண்டாம்.

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் வாரணாசியில் ரயில் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தென் மண்டலத்தைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரை இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததன் காரணமாக இன்று ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட் முன்பதி செய்திருந்தாலும் கும்பமேளா கூட்ட நெரிசினால் அவர்களால் வர முடியவில்லை. கும்பமேளாவுக்கு சென்று வட மாநிலத்தில் தவித்த செய்தி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். சரியான நடவடிக்கையை அந்த மாநில அரசும் எடுக்கவில்லை; ஒன்றிய பாஜக அரசும் எடுக்கவில்லை. கூட்ட நெரிசலை எவ்வாறு கையாள்வது என்பது கூட தெரியவில்லை” என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சரின் அறிவுறத்தலின்படி உடனடியாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அழைத்து வருவதற்கு முழு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

வீரர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக விமான டிக்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிற செலவிற்கு 15 ஆயிரம் ரூபாயும் அவர்களின் வங்கி கணக்கில் போடப்பட்டது. மதியம் பெங்களூரு வந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அடுத்த கட்டமாக நிதியை பெறுவதற்கு முதலமைச்சருடனும் கூட்டணி கட்சியுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்றும் கூறினார்.