தமிழ்நாடு

குஜராத்தில் இருந்து தமிழகம் வருகிறது ராஜராஜ சோழன் சிலை

webteam

தஞ்சை பெரியகோயிலில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட இரு சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காலிகோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை தமிழக சிலை திருட்டு தடுப்பு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு மீட்டுள்ளது. இச்சிலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலோகமாதேவியின் சிலைகள் இரண்டும் ஐம்பொன்னால் ஆனவை. தஞ்சை பெரிய கோயிலுக்கு ராஜராஜசோழன் 66 சிலைகளை நன்கொடையாக கொடுத்திருந்தது கல்வெட்டுத் தகவல்களில் தெரியவந்துள்ளது. அதில் இரு சிலைகள் திருடப்பட்டுள்ளன. சிலைத் திருட்டு தொடர்பான தகவல் சில மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்திவந்தது.