தமிழ்நாடு

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Rasus

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் ஈரோடு ஆட்சியராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கிருஷ்ணகிரி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.