சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜஜி புவனேஷ்வரி புறநகர் பகுதிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா தடுப்புக்கு உதவ மண்டல வாரியாக 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஐபிஎஸ் அதிகாரிகள் மகேஷ்குமார் அகர்வால், ஆபாஷ் குமார், அமரேஷ் புஜாரி, அபய்குமார் சிங் மற்றும் பவானீஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.