தமிழ்நாடு

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் 

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் 

webteam

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு சார்பில் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவரகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்டவை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு சார்பில் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு சார்பில் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்ராஜை நியமித்து சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.