சென்னையில் டிக்டாக்' பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாக பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து புகார் கொடுத்த தனம் செய்தியாளர்களிடம் கூறுகையில்... 'தனது பிள்ளைகள் ஆன்லைனில் படித்து வந்தபோது, சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. இது பற்றி ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது தன்னை ஆபாசமாக பேசியதோடு தனது நம்பரை சமூக வலைதளங்களில் பாலியல் தொழிலாளி எனக்கூறி பதிவு செய்துள்ளார்.
மேலும் ரவுடி பேபி சூர்யா கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை குறிவைத்து அதிக பணம் தருவதாக கட்டாயப்படுத்தி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வருகிறார். காவல்துறை, முதல்வர் என யாரிடம் சென்றாலும் ஒன்றும் செய்யமுடியாது என ரவுடி பேபி சூர்யா மிரட்டுகிறார்.
இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுடி பேபி சூர்யா குறித்தான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருக்கிறது. உடனடியாக ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று புகார் கொடுத்துள்ள தனம் தெரிவித்துள்ளார்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F283733556998702%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>