தமிழ்நாடு

'மிசா கைது; நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது'- மு.க.ஸ்டாலின்

webteam

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பெரியண்ணன்அரசு இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பங்கேற்றார். இந்த விழாவில் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின் தான் என்று அரசகுமார் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தவர் ஸ்டாலின். என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பவர் ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலாக உண்மைகளை வெளிப்படையாக பாஜகவின் அரசகுமார் பேசியுள்ளார். மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது.  மண்புழுவைப் போல நெளிந்து போய் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கருணாநிதியின் மகன். ஒருபோதும் தன்மானத்தை இழக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.