நாடாளுமன்ற கேள்வி நேரத்தை நிறுத்திவைக்கும் முடிவை கைவிடவேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்” முன்னெப்போதும் இல்லாத தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில், குடிமக்களுக்கு தற்போது வெளிப்படையான தகவல்கள் தேவைப்படுவதால், கேள்விநேரம் முன்பை விட இப்போது மிகவும் அவசியமாகிறது. நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தை நிறுத்திவைப்பது, ஜனநாயகத்தின் முக்கிய எதிர்ப்பின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. எனவே இந்த முடிவை மாற்றியமைக்க பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கேள்விநேரத்தை நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு ஏற்கனவே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.