தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என யூடியூபர் இர்ஃபான் தெரிவித்துள்ளார். தனது குழந்தையின் பாலினத்தை இர்ஃபான் அறிவித்தது மற்றும் குழந்தை பிறப்பின் போது தொப்புள் கொடியை வெட்டியது உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழக சுகாதாரத்துறை இர்பானுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பினாலும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆளும் திமுகவுடன் இர்ஃபான் நெருக்கமாக உள்ளதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்து இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது மட்டுமே, அதற்காக என்னை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள்” என இர்ஃபான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவங்களை பொருத்தவரையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது எனவும் இர்ஃபான் கூறியுள்ளார்.