டிடிவி தினகரனை தமக்கு யாரென்றே தெரியாது என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனுக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளனர். மேலும் டெல்லிக்கு வெளியே பல இடங்களுக்கு அழைத்து சென்று சுகேஷ் சந்திரசேகரை விசாரணை செய்ய வேண்டும் என டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். விசாரணையின் போது டிடிவி தினகரன் மாறுபட்ட பதில்களை தெரிவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில் டிடிவி தினகரனை தமக்கு யாரென்றே தெரியாது என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளனார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வெளியே வரும்போது சுகேஷ் இதனை தெரிவித்தார்.