தமிழ்நாடு

அரசியல்ல எனக்கு நடிக்க தெரியல: விலகினார் ஆர்த்தி

அரசியல்ல எனக்கு நடிக்க தெரியல: விலகினார் ஆர்த்தி

Rasus

அரசியலில் தனக்கு நடிக்க தெரியாததால் அதிமுக-வில் இருந்து விலகுவதாக, நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர்த்தி, அதிமுக-வின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் அதிமுக-வில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

’சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை பல்வேறு விதமான நகைக்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடிக்கின்றேன். ஆனால் அரசியல் மூலமாக நடித்து மக்களை ஏமாற்றத் தெரியவில்லை. மேலும் அதனை நான் விரும்பிவில்லை என்பதால் வேதனையுடன் அதிமுக-வில் இருந்து விலகுகிறேன்’ என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.