அன்புமணி, ராமதாஸ் pt
தமிழ்நாடு

"இனி நான் தான் தலைவர்" பாமக தலைவர் ராமதாஸா? அன்புமணியா? திடீரென வெளியான அறிக்கை..?

பாமக தலைவர் யார் என்ற குழப்பம் தொண்டர்களிடையே நிலவி வரும் நிலையில் அன்புமணி வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை தான் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...பாமகவில் நடப்பது என்ன...அன்புமணி அறிக்கையில் கூறியது என்ன பார்க்கலாம்..!

விமல் ராஜ்

அன்புமணிக்கும்- பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல்:

கடந்த டிசம்பர் மாதம் பாமக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்ததற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்... அப்போது அன்புமணிக்கும்- பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது..இந்த மோதல் போக்கு பாமக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது... "பனையூர் அலுவலகத்தில் தன்னை நிர்வாகிகள் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அன்புமணி மேடையில் இருந்து வெளியேறினார்...

Anbumani

தலைவராக நானேசெய்லபடுவேன் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு:

இந்த நிலையில் தான், அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸ், "பாமக தலைவராக நானே செய்லபடுவேன் என்றும் அன்புமணி பாமக செயல் தலைவராக இருப்பார்" என நேரடியாக அறிவித்தார்..இந்த அறிவிப்பு மேலும் கட்சி நிவாகிகளிடையே குழப்பத்தை அதிகப்படுத்தியது.. இப்படியான சூழலில் தான், "பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன்" என அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தான் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாமக தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் வாழ்த்துகளுடனும் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

அன்புமணி - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் - அன்புமணி

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாமக சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய ராமதாஸ், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.போ

அரசியல் களத்தில் ராமதாஸின் லட்சியங்களை வென்றெடுப்போம்:

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாமக தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும். அரசியல் களத்தில் ராமதாஸின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.. இந்த திடீர் அறிக்கை தான் பாமக தலைவர் ராமதாஸா..? இல்லை அன்புமணியா..? என்ற குழப்பம் நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது..