தமிழ்நாடு

ரஜினி அறிவிப்பு, ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி அறிவிப்பு, ரசிகர்கள் கொண்டாட்டம்

webteam

அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்ததையடுத்து ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறேன்’ என ரஜினி தெரிவித்திருந்தார்.இதனையடுத்து  அவர் இன்று என்ன அறிவிப்பார் என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அவர் பேசும்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார். 

இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் இந்த புத்தாண்டுக்கு தங்கள் தலைவர் தித்திப்பான செய்தியை தெரிவித்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.