ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மாவின் வேட்பாளர் நான் தான் என அதிமுக அம்மா அணி சேர்ந்த டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தேர்தலில் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், இவர்களால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் தான் சென்றாக வேண்டும். எது வந்தாலும் அதனை சந்திப்பேன். எப்போது ஆர்.கே.நகர் தேர்தல் நடந்தாலும் நான் தான் அம்மாவின் வேட்பாளர். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மாற்றப்படலாம் என்று செய்தி பரவுகிறதே என கேட்டபோது ” அப்படி ஏதும் இல்லை. அது வதந்தி என்று கூறிய டிடிவி தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு எல்லாம் போய் வந்திருக்கிறார் என்றார்.