புதுக்கோட்டை மாவட்டத்தை தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான உரிமம் பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான கோப்புகள் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளன என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மழையின்றி விவசாயம் பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது நிலத்தடி நீரை அடியோடு அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கைவிடப்பட்ட மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.