தமிழ்நாடு

மனைவி வேண்டும் - மரத்தின்மேல் ஏறிபோராடிய கணவன்

மனைவி வேண்டும் - மரத்தின்மேல் ஏறிபோராடிய கணவன்

webteam

தேனி அருகே மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி மரத்தின்மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம்‌ போடியில் பிரிந்து சென்ற தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி மரத்தின் மீதேறி ஆட்டோ ஓட்டுநர் விஜி என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென தற்கொ‌லை‌ மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. போடியில், பெரியாண்‌டவர் கோயில் முன்புறம் உள்ள மரத்தின் உச்சியில் ஏறி போராட்டம் நடத்திய அவரிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கீழே இறங்கி வர சம்மதம் தெரிவித்த விஜியை  தீயணைப்புத்துறையினர் ஏணி மூலம் கீழே இறக்கினர். அதையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் விஜியை போலீசார் கைது செய்தனர்.