தமிழ்நாடு

பேஸ்புக் பழக்கம், தியேட்டரில் கல்யாணம்: எஸ்கேப் கணவனை தேடுது போலீஸ்

பேஸ்புக் பழக்கம், தியேட்டரில் கல்யாணம்: எஸ்கேப் கணவனை தேடுது போலீஸ்

Rasus

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முகநூலில் காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய சேலம் வாலிபர் உள்பட மூவர் மீது மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மானாமதுரை அருகே காட்டு உடைகுளம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கடந்த 2012-ம் ஆண்டு சேலம் மாவட்டம் கங்கவள்ளி தாலுகா கடம்பூரை சேர்ந்த வெங்கடேஷ்வரனுடன் முகநூலில் அறிமுகம் ஆனார்.

இரண்டு வருடங்களாக காதலித்த நிலையில் மதுரைக்கு வந்த வெங்கடேஷ்வரன் மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்து மஞ்சுளாவுக்கு தாலி கட்டினார். இதனை உண்மையென்று நம்பிய மஞ்சுளா, அவருடன் சென்னையில் 2 ஆண்டுகளாக ஒரே அறையில் தங்கியுள்ளார். பிறகு ஒரு நாள் திடீரென்று மாயமாகிவிட்டாராம் வெங்கடேஷ்வரன்.

அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் கணவரை தேடி சேலத்துக்குச் சென்றார் மஞ்சுளா. அங்கு அவரை, வெங்டேஷ்வரனின் அம்மா அகிலாவும், உறவினர் மயில்வாகனம் என்பவரும் சேர்ந்து மிரட்டி, திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மஞ்சுளா அளித்த புகாரைத் தொடர்ந்து மானாமதுரை போலீசார் வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.