தமிழ்நாடு

நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன் !

நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன் !

Rasus

சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில், நீதிபதி முன்பே கணவர் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். அதிகப்படியானோர் வருவதால் போலீசாரும் தக்க பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில் வழக்கு ஒன்றிற்காக நீதிபதி கலைவாணன் முன்பு சரவணன் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் ஆஜராகினார்.

அப்போது யாரும் எதிர்பாராதவகையில் நீதிபதி முன்பே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி வரலட்சுமியை கடுமையாக குத்தினார் சரவணன். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக சரவணனை பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மனைவி வரலட்சுமி தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.