தமிழ்நாடு

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

webteam

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், தனியார் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

எந்த காரணமும் இன்றி தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசு, காவல்துறை தலைவர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வார காலமாக போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்ததாகவும், மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை மீறாமல் நடந்து கொண்டதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.