தமிழ்நாடு

உடல் உறுப்பு தானத்தால் எட்டு பேர் மறுவாழ்வு

உடல் உறுப்பு தானத்தால் எட்டு பேர் மறுவாழ்வு

webteam

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மி பாளையத்தைச் சேர்ந்தவர் கோமதி. கடந்த 4ஆம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கோமதிக்கு ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதைனையடுத்து அவரது உடல் உறுப்புகளை பிரித்தெடுக்கும் அறுவை சிச்சை நடந்தது. அதில் கல்லீரல், சிறுநீரகம், இருதயம், எலும்பு மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.