தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

webteam

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளிவைக்கப்பட்டன. இதையடுத்து ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி https://tnepass.tnega.org/#/user/pass என்ற லிங்க் மூலம் மாணவர்கள்,ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இபாஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.