செல்வப்பெருந்தகை pt desk
தமிழ்நாடு

பெரியாரை விமர்சித்து விட்டு ஈரோடு இடைத்தேர்தலை சீமான் எப்படி சந்திப்பார் - செல்வப்பெருந்தகை

மத்திய அரசு தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதி பங்களிப்பை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்;

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தி.நகர் பகுதியில் மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது...

PM Modi

தமிழ் தான் மூத்த மொழி. தமிழர்கள் தான் மூத்த குடி என்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்கள். ஆனால், சமஸ்கிருதம் தான் மூத்த மொழி, சிறந்த மொழி என்று சொன்னவர்கள் இன்று தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கீழடி பொருநை உள்ளிட்டவை அகழாய்வு அடிப்படையில் உலகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் உறுதி செய்து இருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழி குறித்த பெருமையாக பேசி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் நிதியை கொடுக்க மறுக்கிறார். மத்திய அரசின் இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நிதி பங்களிப்பை விடுவிக்க வேண்டும்.

Seeman

பெரியார் குறித்து அவதூறாக பேசும் போது அதிமுக ஏன் மௌனமாக இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், பெரியாரை விமர்சித்து விட்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சீமான் எப்படி சந்திப்பார் இதற்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.