தமிழகத்தில் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததே இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இனிமேல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகம் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சுட்டிக்காட்டியது.