தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா?

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா?

webteam

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 411 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா என்பது குறித்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் 21, கரூரில் 20, செங்கல்பட்டு 18, மதுரை 15, விழுப்புரம் 13, திருவாரூரில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் 43, நெல்லை, 36, ஈரோடு 32, கோவை 29, தேனியில் 21 பேருக்கு கோரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர் 11, திருப்பத்தூர் 10, தூத்துக்குடி 9 , சேலத்தில் 8 பேருக்கு கொரோனா இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகையில் தலா 5 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் தலா 2, திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.