ஹோட்டல் உணவு
ஹோட்டல் உணவு புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவு: விஷமாக மாறுவது எப்படி?

PT WEB

நாமக்கலில் உள்ள ஹோட்டல் ஒன்றில், ஷவர்மா உட்கொண்ட, 14 வயது பள்ளி மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் கெட்டுப்போன உணவுப் பொருட்களைப் பறிமுதலும் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஆயிரத்து 24 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி, கிருமிநாசினி மூலம் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 115 கடைகளுக்கு ரூ.1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் 206 கடைகளுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவு எப்படி விஷமாக மாறுகிறது என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.