தமிழ்நாடு

மழையால் இடிந்து விழுந்த மண்வீடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

மழையால் இடிந்து விழுந்த மண்வீடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

Rasus

கடலூரில் மழை காரணமாக மண்வீடு இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.‌

கடலூர் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தமது குடும்பத்தினர் ஐந்து பேருடன் உறங்கிக்கொண்டிருந்தார். ரயில்பாதையை ஒட்டியுள்ள இ‌வர்களது வீட்டைச் சுற்றியும் கனமழை காரணமாக நீர் தேங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தீடீரென மண் வீடு முழுவதும் இடிந்து விழுந்துள்ளது.

இதில் இடிபாடுகளில் சிக்கி நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஷ் மற்றும் ஒன்றரை வயது பேத்தி தனுஸ்ரீ ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே பாதை அருகே வீடு அமைந்திருந்த நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற அதிர்வில் ஈரப்பதத்துடன் இருந்த வீடு இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.