தமிழ்நாடு

சப்பாத்தி வர தாமதம்: வாடிக்கையாளர் ஆத்திரம் - மண்டையை உடைத்த உணவக ஊழியர்

சப்பாத்தி வர தாமதம்: வாடிக்கையாளர் ஆத்திரம் - மண்டையை உடைத்த உணவக ஊழியர்

webteam

கடலூரில் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால் உணவக மேஜையை வாடிக்கையாளர் உடைக்க, அவரது மண்டையை உணவக ஊழியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், மனைவி கவிதாவுடன் அருகில் உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளார். சப்பாத்தி ஆர்டர் செய்து வெகுநேரமாகியும் வராததால், ஆத்திரடைந்த சுரேஷ், மேஜையை தூக்கிப்போட்டு உடைத்துள்ளார்.

இதனால், அவருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் உணவக ஊழியர்கள் சுரேஷை கடுமையாக தாக்கியதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.