chicken rice pt desk
தமிழ்நாடு

‘பணம் தர்றோம், பெரிதுபடுத்த வேணாம்...’ கெட்டுப்போன சிக்கனை கொடுத்துவிட்டு சமாதானம் பேசிய ஹோட்டல்?

சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

webteam

சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள பிரியாணி கடையொன்றில், முனுசாமி என்பவர் வாங்கிய சிக்கன் ரைஸ் மற்றும் கிரில் சிக்கன் ஆகியவை கெட்டுப் போய் இருந்ததால், அவருக்கு உடல்நலம் பாதித்தாகக் கூறி உணவகத்தில் முறையிட்டுள்ளார். அப்போது, கூடுதல் பணம் தருவதாகவும், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் ஹோட்டல் ஊழியர்கள் அவரை சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

chicken

இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முனுசாமி அளித்த புகாரின் பேரில் உணவகத்தின் மேலாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.