தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரம், மே, ஜூன் மாதங்களில் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியிலேயே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வெயில் இப்போது அதிகரித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தர்மபுரி, மதுரை, வேலூர், திருத்தணி, நாகப்பட்டிணம், பாளையங்கோட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
இதற்கிடையே ’மாருதா’ புயல் காரணமாக. தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.