ஓசூர் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று ஓசூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை நகராட்சியாக
இருந்து வந்த ஓசூர் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் ஓசூரில் விமான நிலையம்
அமைக்கப்படும். சூலகிரி அருகே வர்த்தக ஊக்குவிப்பு மையம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என அடுக்கடுக்கான அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். அதோடு கிருஷ்ணகிரி சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.