தமிழ்நாடு

திரும‌ணமான ‌‌3‌ மா‌தத்தில் பெண் உயிரிழப்பு - கோட்டாட்சியர் விசாரணை

திரும‌ணமான ‌‌3‌ மா‌தத்தில் பெண் உயிரிழப்பு - கோட்டாட்சியர் விசாரணை

webteam

ஓசூர் அருகே திருமணமான ‌3 மாதத்தில் பெண் உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். 

கிருஷ்ணகிரி மாவட்‌டம் ஓசூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி வசந்தா தூக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதைப்பார்த்த சிவா விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வசந்தாவின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

அதில், மன‌‌உறுதி கொண்ட தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும், வசந்தாவின் இறப்பில் சந்தேகம் இருப்‌தாகவும்‌ தெரிவித்திருந்தனர். ஆனால் வசந்தா உயிரிழப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை ‌என சிவாவின் குடும்பத்தி‌னர் கூறியுள்ள‌னர். இந்நிலையில் ஓசூர் கோட்டாட்சி‌ர் விமல்ராஜ் உயிரிழந்த வசந்தாவின் உடலை பார்வையிட்டு, இருதரப்பினரிடமும் விசாரணை ‌நடத்தினார்.