தமிழ்நாடு

மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம்; என்ன காரணம்? - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

webteam

ஒசூர், அரசுப்பள்ளியில் அடுத்தடுத்து மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட வாந்தி, மயக்கத்துக்குக்கான காரணத்தை கண்டறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், காமராஜ் காலனி மாநகர நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் (விஷ வாயு) துர்நாற்றம் வீசியதாக 150 க்கும் அதிகமான மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் மாணவர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பெற்றனர். சிகிச்சைபெற்று வீடுதிரும்பிய 7 மாணவர்களுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் உண்டானது.

உடனடியாக மீண்டும் ஒசூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்கள் ஒருவித துர்நாற்றம் வீசியதை சுவாசித்ததே இதற்கான காரணம் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், இதுக்குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்து வருகின்றனர்.