சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தான் நடித்த மாத்திரை விளம்பரம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதாக சமையல் மந்திரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா புகார் அளித்துள்ளார்.
விளம்பரத்தை, 3 மாதம் மட்டுமே ஒளிபரப்பப்படும் என கூறி விட்டு, 2 ஆண்டுகளாக நிறுவனம் ஒளிபரப்புவதாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். மேலும், விளம்பரத்தை தடை செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, நீதிமன்றமும் விளம்பரத்தை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்ததாக திவ்யா தெரிவித்துள்ளார். அந்த விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதால் அதை தடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில் திவ்யா கூறியுள்ளார்.