தமிழ்நாடு

மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர்‌ வெடித்து விபத்து

மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர்‌ வெடித்து விபத்து

webteam

காஞ்சிபுரத்தை ‌அடுத்த பொன்னேரிகரை நெடுஞ்சாலையிலுள்ள தனியார் மருத்துவ‌னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து‌ ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிகரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சமையல் செய்யும் பொழுது எரிவாயு சிலிண்டர் தீர்ந்து போனது. இதை அடுத்து புதிய எரிவாயு சிலிண்டரை மாற்றும் பொழுது கவனக் குறைவினால் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறை வாகனங்கள் உடனடியாக தீயை அனைத்து வெடித்த எரிவாயு உருளையை அப்புறப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.