திருவள்ளுர் மாவட்டம் மாங்காடு அருகே வாடகைக்கு வீடு தர மறுத்த உரிமையாளரின் வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கினர்.
மாங்காடு அடுத்த கோவூர் சாரதா நகரில் வசித்து வருபவர் சுரேஷ்ராஜன். அவரது வீட்டின் மேல்பகுதியில் மசாஜ் சென்டர் அமைக்க பெண்கள் வாடகைக்கு கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுத்ததால் அந்த வீட்டின் மீது 3 பெண்கள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கற்கள், கட்டைகளை கொண்டு அவர் வீட்டின் மீது அப்பெண்கள் தாக்குதல் நடத்தினர். இதில், வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.