கடலூர், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.