தமிழ்நாடு

கனமழை காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை

webteam

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சீதாலட்சுமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடியில் கனமழை நீடித்து வருவதால், அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை அண்ணா மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.