தமிழ்நாடு

திமுகவில் திரும்பிய வரலாற்று ஆச்சரியம்... சிலாகிக்கும் திமுக தொண்டர்கள்..!

webteam

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று சந்தித்த முதல் தேர்தலில் கிடைத்த வெற்றியே தற்போது அவரது மகனுக்கும் கிடைத்திருப்பதாக திமுக தொண்டர்கள் சிலாகித்து வருகின்றனர்.

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 1971-ஆம் ஆண்டு முதல்முறை தேர்தலை சந்தித்தார். அப்போது அந்த தேர்தலில் கிடைத்த வெற்றி போன்றே தற்போது திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னும் கிடைத்துள்ளது. அந்த சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், அண்ணா மறைவுக்கு பின் 1971 ஆம் ஆண்டு திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தவுடன், கருணாநிதி முதல் மக்களவைத் தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலில் திமுக 23 இடங்களையும் காங்கிரஸ் 9 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களையும், முஸ்லிம் லீக், பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் தலா 1 இடத்தையும் கைப்பற்றி இருந்தன.

அந்த தேர்தலில் கிடைத்த அதே மாதிரியான முடிவுகள், தற்போது ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றப் பின் கிடைத்திருக்கிறது. எனவே மிக அரிதாக தந்தைக்கும் மகனுக்கும் கிடைத்திருக்கும் ஒரே மாதிரியான வெற்றியை வலைதள பயன்பாட்டாளர்கள், அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தேர்தல் பரப்புரையின்போது, மேடைதோறும், கருணாநிதி மகன் என்ற முறையில் வாக்கு கேட்க வந்திருப்பதாக தழுதழுத்த குரலில் ஸ்டாலின் பேசியதால், தந்தைக்கு கிடைத்த வெற்றியே மகனுக்கும் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த திமுகவினரையும் சிலாகிக்க செய்துள்ளது.