தமிழ்நாடு

”கோயிலில் எதற்கு ஏற்றத்தாழ்வு; விஐபி முறை படிப்படியாக நிறுத்தப்படும்” - அமைச்சர் சேகர்பாபு

webteam

கோவில்களில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘திமுக பொறுப்பேற்ற பிறகு மாதந்தோறும் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் தலைமை மற்றும் ஆணையர் தலைமையில் 15 வது சீராய்வு கூட்டம் நடைபெறும் வருகிறது.

2022 ஆண்டு 112 அறிவிப்புகளில் அதில் உள்ள 3761 பணிகள் குறித்தும். மேலும் 2022 - 23ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட குறிப்புகள் குறித்தும், 1 கோடி ரூபாய்க்கு மேல் இடம் பெற்றிருந்த 112 அறிவிப்புகள் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு பணிக்கான உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 22-23 ஆண்டுகளுக்கான அறிவிப்புகளும் பணி நடைபெறுகிறது, அதில் 3200 கோடி ரூபாய்க்கு இந்த 2 ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3739.40 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்கப்பட்டு உள்ளது. 254 கோடி ரூபாய் நிலுவை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்

இந்து சமய அறநிலை துறை சார்பில் இதுவரை 87 ஆயிரம் மர கன்றுகள் நடப்பட்டுள்ளது, அதில் மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும்.

நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது, நகைகள் மீட்டு உருக்கப்பட்டுள்ளது என்று வாய் வார்த்தையாக சொல்ல கூடாது ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார்.
பாஜக மாநில துணை தலைவர் வி. பி. துரைசாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ‘தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல், நடிப்பவர்களை எழுப்ப முடியாது, இதுபோல தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்து சமய அறநிலை துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள் பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது, இந்த புத்தகத்தை இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம், இந்து சமய அறநிலையத் துறைக்கு காசி சங்கமம் குறித்த நிகழ்விற்கு அழைப்பு வரவில்லை, வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்

கோயில்களில் விஜபி தரிசனம் என்பது இந்த ஆட்சியில் உருவாக்கியது அல்ல, நாளடைவில் விஜபி தரிசனம் முடக்கப்படும். பெரிய கோவில்களில் விஜபி தரிசனம் மற்றும், கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் முறையை அந்தந்த கோவில்களில் வருமானம் பொறுத்து படிப்படியாக குறைத்து கொள்ளப்படும்.

கோவில்களில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்க்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.