தமிழ்நாடு

'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்

'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்

webteam

திமுக பலமாக இருக்க வேண்டுமெனில் அண்ணன் தம்பிகள் ஸ்டாலினும் அழகிரியும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இணையவேண்டும் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் குட்கா ஊழல் தொடர்பான கேள்விக்கு “குட்கா ஊழல் பொருத்தவரை சி பி ஐ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஊழல் மீது திமுக தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது. எதிர்கட்சி என்ற வகையில் திமுக செம்மையாக செய்கிறது. சிபிஐ தனிப்பட்ட அதிகாரம் கொண்டது அதனை மத்திய அரசு தான் என கூற முடியாது” என்றார். மேலும் ஏழு பேர் விடுதலை பற்றிய கேள்விக்கு  “நிச்சயம் விடுதலை ஆவார்கள்,ஏழு பேர் விடுதலை விசயத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்” என்றார். 

இதனைதொடர்ந்து பேசிய அவர்  “திமுக\வில் ஸ்டாலின் தலைவராக உள்ளார்,கட்சி பலமாக இருக்க வேண்டுமெனில் ஸ்டாலினும் அழகிரியும், அண்ணன் தம்பிகள் என்ற முறையில் மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் இணைய வேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு கேள்விக்கு பதிலளித்த அவர்  “எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது, அதனை ஒழிக்க வழியே கிடையாது” என்றார்