தமிழ்நாடு

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படமாட்டாது - அமைச்சர் க.பாண்டியராஜன்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படமாட்டாது - அமைச்சர் க.பாண்டியராஜன்

webteam

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இந்தி கற்பிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில்  உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும் ஓர் உலக மொழி, ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தெலுங்கு மொழிக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.