நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் கடந்த 18ஆம் தேதி நிறைவடைந்தது. இம்முறை வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தானதால் மொத்தம் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இம்முறை தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 71.90%ஆக இருந்தது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49 % பதிவாகியது. அதேபோல குறைவாக தென்சென்னை தொகுதியில் 56.34% சதவிகிதம் பதிவாகியது.
ஒருநாடாளுமன்றத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியது. இந்நிலையில் அவற்றில் அதிகபட்சமாக வாக்குப்பதிவாகிய மற்றும் குறைந்தப் பட்சமாக வாக்குகள் பதிவாகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் எவை?
அதிகபட்சமாக வாக்குப்பதிவான பகுதிகள்:
சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு%
குளிதலை 85.77%
பாலகோடு 85.63%
கிருஷ்ணராயபுரம் 84.22%
வீரபாண்டி 83.86%
பென்னாகரம் 83.72%
அரியலூர் 83.20%
குறைந்தபட்சமாக வாக்குப்பதிவான பகுதிகள்:
சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு%
மயிலாப்பூர் 54.78
சோளிங்கநல்லூர் 55.17
தாம்பரம் 56.30
சைதாப்பேட்டை 56.36
துறைமுகம் 56.99
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் குறைவான வாக்குகள் பதிவாகிய தொகுதிகள் அனைத்தும் சென்னையில் இருப்பது இந்த புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.