தமிழ்நாடு

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு!

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு!

webteam

புயலின் தாக்கம் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

தீவிரப் புயலாகவும், அதி தீவிரப் புயலாகவும் வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'நிவர்', நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மூன்று மணி நேரம் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது.

இந்நிலையில் நிவர் புயலானது புதுச்சேரியில் இருந்து வடமேற்கு நிலப்பகுதியில் நிலைகொண்டு பயணிக்கிறது. தற்போது தீவிர புயலாக உள்ள நிவர், மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயலின் தாக்கம் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சாலையில் செல்லும் சில வாகன ஓட்டிகளும் காற்றின் வேகம் காரணமாக இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அவ்வப்போது சென்னையில் சாரல் மழையும் பெய்து வருகிறது