தமிழ்நாடு

இடப்பகிர்வு குறித்த மனு: தனியார் பொறியியல் கல்லூரி சங்க கோரிக்கை நிராகரிப்பு

இடப்பகிர்வு குறித்த மனு: தனியார் பொறியியல் கல்லூரி சங்க கோரிக்கை நிராகரிப்பு

Rasus

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களை, தனியார் கல்லூரிகளுக்கு அளிக்க வேண்டும் என்ற மனுவை, இடப்பகிர்வு தொடர்பான வழக்கோடு சேர்த்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவிதித இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளின் 65 சதவிகித இடங்களையும் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் அரசு நிரப்பி வருகிறது. தனியார் கல்லூரிகளுக்கும், அரசுக்கும் இடையிலான இடப்பகிர்வு முறையை மாற்றக்கோரி திருநெல்வேலி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதுவரை, கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் அரசு நிரப்பக்கூடிய இடங்களையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், அந்த இடங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டி சங்கத்தின் சார்பில் கூடுதல்‌ மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு ஒதுக்கீடு இடங்களை தனியாருக்கு ஒப்படைப்பது என்ற கோரிக்கையை கூடுதல் மனுவா‌க விசாரிக்க நீதிபதி ரவிச்சந்திரபாபு மறுத்தார். வேண்டுமானால், தனியாக வழக்கு தொடரலாம் என்று கூறிய நீதிமன்றம், இடப்பகிர்வு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அண்‌ணா பல்கலைக்கழகத்திற்கு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.