சென்னை ஜமீன் பல்லாவரத்தில், தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் உள்ள வீட்டுமனைகளில் வீடு கட்ட அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.